Monday, 26 May 2008

ஏறாவூரில் பிள்ளயான் குளுவினருக்கு எதிராக முஷ்லீம்கள் நடாத்திய ஆர்பாட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி 9 பேர் படுகாயம்

east-protest.jpgமட்டக்களப்பு ஏறாவூரில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தாய் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மகன் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். கடந்த வியாழக்கிழமை (மே22) கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம் இளைஞர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை 5 மணியவில் (மே26) விசேட அதிரடிப்படையினர் நடத்திய திறந்தநிலைக்குட்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஏறாவூர் பெற்றோல் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் ரயர்களைப் எரித்து வீதியை மறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் விசேட அதிரடிப்படையினர் அவர்களை விரட்ட எடுத்த முயற்சியின் போது இளைஞர்கள் அதிரடிப்படையினரை நோக்கி கற்களை எறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதிரடிப்படையினர் தீர்த்த வேட்டுகளில் முஸ்லீம் தாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

No comments: