பிள்ளையானை கிழக்கு மாநில முதல்வராக்க ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் அரசின் முஸ்லீம் அமைச்சர்களது கடும் எதிர்ப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசிலிருக்கும் 11 முஸ்லீம் அமைச்சர்களுடன் நேற்று நெடுநேர பேச்சு வார்த்தைகளில் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஜனாதிபதி சமரச முயற்சிகளை மேற் கொள்ள முயன்ற போதும் பிள்ளையான் முதலமைச்சரானால் தம்மால் அப் பகுதிக்கு போவதையோ அல்லது அங்கு அரசியல் நடத்துவதையோ நினைத்துக் கூட பார்க்க முடியாது எனவும் அப்படி ஒரு நிலை ஏற்படின் சுயேற்சையாக அங்கு வேலை செய்ய நேரிடலாம் எனவும் முஸ்லீம் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (16) பி.ப. 1.30க்கும் 2.00 மணிக்கும் இடையேயான நேரத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு தேர்வானவர்களுக்கு அறிவித்திருந்த நிலையில் இன்று பி.ப.2.07 சுப நேரத்தில் சத்திய பிரமாணம் எடுப்பதற்கு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது ஸ்தம்பிதமாகியுள்ளன.
கிழக்கில் அதிக ஆசனங்களை பிள்ளையான் தரப்பினர் பெற்றுள்ளனர். அவர்களது கட்சி 6 ஆசனங்களை பெற்றுள்ளது. ஏனையவர்கள் பெற்றுள்ள ஆசனங்கள்: சிறீலங்கா சுதந்திரக் கட்சி 5, அத்தாவுல்லா தரப்பினர் 4, கிஸ்புல்லா 3.
அரசு தரப்பில் முஸ்லீம்கள் 8 பேர் இருந்தாலும் அவர்களில் நால்வர் அத்தாவுல்லா தரப்பினராகும். கிஸ்புல்லாவுக்கு கிடைத்திருப்பதோ 3 அமைச்சர் பதவிகள் மட்டுமே. இது பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதற்கான முக்கிய காரணியாக உள்ளது.
இருந்தாலும் கிழக்கு மாகாண மெளலவிகளின் அழுத்தங்கள் கிஸ்புல்லாவுக்கே முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் எனும் கோஸமாக தெரிகிறது. இதை நிர்வர்த்தி செய்யாவிடில் கிழக்கில் அவர்களால் அரசியல் நடத்த முடியாது எனும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது என முஸ்லீம் தரப்பினர் விடாப்பிடியாக நிற்கின்றனர்.
நாளை மீண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கிழக்கில் தேர்வான 20 பேருடனும் நேரடி பேச்சு வார்த்தைகளை நடத்தவிருப்பதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment