Monday, 5 May 2008

ஐநாவின் பெயரைப் புலிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு:

ஐக்கிய நாடுகள் சபையின் பெயரைப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தில் வன்னியில் இருந்து மட்டக்களப்புக்கு பயணித்த ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

இதனை மையமாகக்கொண்டே கோட்டாபய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு ஓடும் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப்புலிகள் தென்னிலங்கையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காகவே அவர்கள் சிறிய ரக கைத்துப்பாக்கிகளை போன்ற துப்பாக்கிகளை பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: