Monday, 5 May 2008

வடக்குகிழக்கு நிர்வாகம் ஜனாதிபதியின் இளைய சகோதரரிடம்: றணில்:

வடக்குகிழக்கை நிர்வகிக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது இளைய சகோதரருக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற போதே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமையிலான வடக்குக்கென அமைக்கப்பட்டு;ள்ள சிறப்பு ஏற்பாட்டுக்குழுவில் பசில் ராஜபக்சவும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்;டுள்ளமை தொடர்பிலேயே ரணி;ல் விக்கிரமசிங்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பிள்ளையான் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்ஷலிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுவது குறித்து கருத்துரைத்த அவர்கள் இருவரும் தமது முதலமைச்சர் பணிகளை இரவு வேளைகளில் மேற்கொள்ளமுடியும் என குறிப்பிட்டார்.

தேர்தலி;ல் தோல்வியடைந்தாலும் தேசிய இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அதிகாரப்பரவாலாக்கமே உகந்தது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments: