பிலியந்தலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபருக்கு, லண்டனிலிருந்தே அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றமை, விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான விபரங்கள் லண்டனிலிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் தலைவர் ஒருவர் மீதான தாக்குதல் தொடர்பான விபரங்களும் லண்டனிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக காவற்துறையினர் கூறுகின்றனர்.
இதேவேளை, பிலியந்தலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரது சகோதரர் காவற்துறை உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டி மோட்டார் வாகன காவற்துறைப் பிரிவில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தரது சகோதரரே இவ்வாறு பிலியந்தலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனத் கூறப்பட்டுள்ளது.
குறித்த தமிழ் காவற்துறை உத்தியோகத்தரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 comment:
poisooriya.blogspot.com
poisooriya.blogspot.com
poisooriya.blogspot.com
poisooriya.blogspot.com
Post a Comment