Monday, 5 May 2008

ஜே.வீ.பீ: முரண்பாடுகளும்: வெளியாகும் இரகசியங்களும்:

88ஆம் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை படையினரிடம் காட்டி கொடுத்த மற்றுமொரு தலைவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நபர் ஜே.வீ.பீயின் மருத்துவ பிரிவின் தலைவர் தம்மிக்க பத்திரண என ஜே.வீ.பீயின் நடுநிலை அணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிக்க பத்திரண என்ற இந்த வைத்தியரை ஜே.வீ.பீயின் உயர் மட்டத்திற்கு உயர்த்தியவர்,

88ஆம் 89ஆம் ஆண்டுகளில் காட்டி கொடுப்புக்களின் மூலம் விடுதலைப் பெற்று, தற்போது அந்த கட்சியின் உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான ரகசிய தலைவராக உள்ள பிரேமகுமார் குணரட்னம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த வைத்தியர் பிரேமகுமார் குணரட்னத்தின் மனைவின் சகோதரியையே மணமுடித்துள்ளார். இந்த உறவு முறை காரணமாக தம்மிக்க பத்திரண கட்சியின் மேல் மட்டத்திற்கு செல்ல தடைகள் இருக்கவில்லை. 88ஆம் 89ஆம் ஆண்டுகளின் வன்முறை காலத்தில் ஜே.வீ.பீயின் பிரபல மாணவர் தலைவராக இருந்த நிஷ;மி என்றவரை பத்திரண பாதுகாப்பு படையினரிடம் காட்டி கொடுத்துள்ளார்.

நிஷ;மி பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை இவர் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியிருந்தாக நடுநிலை அணியின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை காட்டி கொடுத்த சோமவன்ஸ அணியில் விஜித ஹேரத், பிரேமகுமார் குணரட்னம் வரிசையில் வைத்தியர் தம்மிக்க பத்திரணவும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments: