கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
எ.எம்.தசநாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் சீதா வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பயங்கரவாதம் மற்றும் அனர்த்தங்களில் உயிரிழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி மகேஸ்வரன் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
எனினும் புதிய இழப்பீட்டு தொகையான 50 லட்சம் ரூபாவை பெற அவரை தங்கி வாழ்வோர் தகுதி பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இயற்கை மரணத்தை எய்திய நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பண்டாரநாயக்கவுக்கும் 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.
Monday, 5 May 2008
கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment