கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து செய்திசேகரிக்கச் சென்றபோது பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற அசோசியேட்டர் பிரஸ் சர்வதேச செய்திச் சேவையின் உள்ளூர் செய்தியாளர்களான கெமுனு அமரசிங்க மற்றும் ரவி நெஸ்மன் ஆகியோர் மட்டக்களப்பு வாழைச்சேனை இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக உட்செல்வதற்கு அனுதிக்கப்படவில்லை. இவர்களைத் திரும்பிச் செல்லுமாறு இராணுவத்தினர் பணித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு செய்தியாளர்களும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment