Saturday, 17 May 2008

கடற்படையின் அசைவியக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!!!--ஸுபத்ரா(வீரகேசரி)



கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஆரம் பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, திருகோணமலைத் துறைமுகத்தினுள் வெடித்த குண்டு இலங்கைக் கடற்படைக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.23 மணி யளவில் திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற, அ520 என்ற கடற்படையின் விநியோகக் கப் பலுக்கு அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது.

உடனடியாகக் கப்பலில் பற்றிக் கொண்ட நெருப்பும், கடலுக்கு அடியில் நிகழ்ந்த வெடிப் பினால் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக குபுகுபு வெனப் புகுந்த நீரும் 13 நிமிடங்களிலேயே கப்பலை துறைமுகக் கடல் விழுங்கிக் கொண் டது.

ஒரு வாரமாகியும் கடலுக்கு அடியில் நிகழ் ந்த இந்தக் குண்டுத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த் தப்பட்டது என்ற குழப்பத்தில் இருந்து, கடற் படை இன்ன?ம் விடுபடவில்லை. அதே வேளை இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்ப வத்தால் திருகோணமலைத் துறை?கத்தின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

மூழ்கிய கப்பல் கடல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியிருக்கவில்லை என்றும் மிக வும் பழமையானதென்றும் கடற்படை அதிகாரிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற னர். ஆனால் இந்தத் தாக்குதலின் பரிமாணமா னது புலிகளின் கடல் போர்?றையில் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியதென்றே சுயாதீனமான தகவல்கள் தெரிவிக் கின்றன.

முதலில், மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் வர லாறு என்னவென்று பார்க்கலாம். 1971ஆம் ஆண்டில் கட்டப் பட்ட இந்தக் கப்பல் கிரேக்க நிறுவனம் ஒன்றினால் சேவையில் ஈடுபடுத்தப் பட்டு வந்தது. "எம்.வி இன்வின் சிபிள்' எனப் பெயரிடப்பட்ட இதன் நீளம் 83 மீற்றர். அகலம் 12 மீற்றர். மொத்தம் 5000 தொன் வரையான எடையுள்ள இந்தக் கப்பல் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத் தில் இருந்து ரஷ்ய அல்லது ஜோர்ஜிய மாலு மிகளால் சட்ட விரோத குடியேற்றவா சிகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்வதற்கு பயன் படுத்தப்பட்டு வந்தது.

2003ஆம் ஆண்டில் தங்காலைக்குக் கிழக் கேயுள்ள ஆழ்கடற்பரப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த 254 சட்ட விரோத குடியேற்றவாசிகளு டன் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையால் கைப்பற் றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கப்பலைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அதைக் கடற்படையிடம் ஒப்ப டைக்க உத்தரவிட்டிருந்தது. கடற்படைக்கு இது ஒரு இனாமாக அல்லது வெகுமதியாகவே கிடைத்திருந்தது.

நீண்டகாலமாக கடற்படைக்கு விநியோகக் கப்பல்கள் இல்லாதிருந்த குறையை இது நிவர் த்தி செய்தது. கடற்படையிடம் இருந்த"அபிதா' மற்றும் "எடிதாரா' போன்ற பல நோக்கு தேவைகளை நிறைவு செய்யும், விநியோக கண்காணிப்பு கட்டளைக் கப்பல்கள் முறையே 1994 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் கடற்புலிக ளால் மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடற்படையிடம் "எஸ்.எல்.என்.எஸ்.சக்தி' போன்ற துருப்புக்காவிகள் இருப்பினும், ஆழ் கடலில் பல நாட்கள் தரித்து நின்று, கண்காணிப்பில் ஈடுபடவும், படையின ருக்கான விநியோகங்களை மேற் கொள்ளவும் அவற்றில் போதிய வசதிகள் கிடையாது.

துருப்புகளை காவிச் செல்வதற்கே அவை பயன்படும். ஆனால் விநியோக உதவிக் கப் பல் என்று அழைக் கப்படும் "இன்வின்சிபிள்' போன்ற கப்பல்கள் தான் இதற்கு ஏற்றவையா கும்.

இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவைய டுத்து கடற்படை இந்தக் கப்பலைப் பொறுப் பேற்று காலித் துறை?கத்தில் வைத்து திருத்த வேலைகளை மேற் கொண்டிருந்தது. திருத்த வேலைகள் ?டிவுறும் தறுவாயில் இருந்த போது, 2004 டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் தெற்காசியாவைப் புரட்டிப் போட் டது. காலித்துறை?கத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்வின்சிபிள் சுனாமி தாக்கியபோது, கடற் படையின் "பராக்கிரமபாகு' (க 351) என்ற ஆழ்கடல் ரோந்தில் ஈடுபடும் அதிவேக ஏவுகணைப் படகுடன் கடலில் மூழ்கிப் போனது.

ஆழமற்ற கடலில் மூழ்கியதால் குறுகிய காலத்திலேயே கடற்படைப் பொறியியலாளர் கள் இதை மீட்டு, திருத்த வேலைகளை மேற் கொண்டனர். 2005ஆம் ஆண்டில் திருத்த வேலைகள் முடிவுற்றதும் கடற்படையினால் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இதன் பெயரும் அ 520 என்று மாற்றப்பட் டது.

கடற்படை அதிகாரிகள் சொல்வது போன்று இது அதிக பயன்பாடற்றது என்பது உண்மை யானால், ஒன்றுக்கு இரண்டு தடவைகள் மிகப் பெரிய செலவில் கடற்படை எதற்காகப் பழுது பார்க்க வேண்டும்? காலி கடலில் மூழ்கிய போதே இதை கைவிட்டிருக்கலாமே? ஆனால், கடற்படை இதைச் செய்யாததற்கு ரணம் அவர்களுக்கு முக்கியமான தேவையாக இந் தக் கப்பல் இருந்ததேயாகும்.

கடற்படையின் கப்பல்கள், பாரிய படகுக ளுக்கு பெயரிடும் போது ஒரு முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது. சிறிய படகுகளான கரையோர ரோந்துப் படகுகள் , அதி வேகத் தாக்குதல் படகுகளுக்கு (XXX) என்ற குறியீட்டு எழுத்தான க என்பதுடன் தொடரிலக்கம் இடப்படும். கரையோர ரோந்துப் படகு களுக்கு க என ஆரம்பித்து அடுத்ததாக 2 என்ற இலக்கத்துடன் மேலும் இரு எண்கள் சேர்க்கப்பட்டு தொடரிலக்கம் இடப்படும்.

உதாரணம் க 211ஆகும். அதிவேகத் தாக்கு தல் படகுகளுக்கு க 4 என்று தொடங்கி, மேலும் இரு எண்கள் சேர்க்கப்பட்டு (க 438) தொடரிலக்கங்கள் இடப்படும். பீரங்கிப்படகு கள் , ஆழ்கடல் ரோந்துப் பட குகள், போன்ற வற்றுக்கு "எஸ்.எல்.என்.எஸ் நந்திமித்ர', "எஸ்.எல்.என்.எஸ் சுரனிமல' போன்ற பெயர் கள் இடப்படுவதுடன் க 3 என ஆரம்பித்து, மேலும் இரு எண்கள் சேர்க்கப்பட்டு (க 351) போன்ற தொடரிலக்கங்களும் வழங்கப்படும்.

ஆனால் கடற்படை தமது விநியோகக் கப் பல்க ளுக்கு அ 520, அ 521 போன்ற தொட ரிலக்கங்களையே வழங்கி வருகிறது. முன்னர் "அபிதா' மற்றும் "எடிதா ரா'வுக்கு பெயரிடப் பட்ட போதும், கடற்படை பின்னர் இணைத் துக் கொள்ளப்பட்ட கப்பல்களுக்கு பெயர்க ளைச் சூட்டவில்லை. கடற்புலிகளால் ?ழ் கடிக்கப்ப ட்ட கப்பல்களுக்கு வழங்கப்பட்ட தொடரிலக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந் தன. எனவே கடற்படைக்குரியதெனக் குறிக்கும் "எஸ்.எல்.என்.எஸ் ' என்று பெயரிடப்படாததால் இதை முக்கியத்துவமற்ற தென்றோ சாதாரணமானதென்றோ எடை போட முடியாது.

திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தப் பட்டு, வடபகுதிக்கான படையின?ன் விநி யோகத் தேவைகளுக்கும், கடற்படையின் ஆழ் கடல் நடவடிக்கைகளின் போதான விநியோக நடவடிக்கைகளுக்கும் இந்தக் கப்பல் பயன் படுத்தப்பட்டு வந்தது. 2007ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் தெய்வேந்திரரினையில் இருந்து தென்கிழக்கே 2800 கி.மீ தொலைவில் கொக்கோஸ் தீவுக்கு அருகே புலிகளின் ?ன்று ஆயுதக் கப்பல் களை அழிக்கும் முன்று நாள் நடவடிக்கையில் ஈடுபட்ட "சயுர', "சுரனிமல', "சமுத்திர', "சக்தி' ஆகிய கடற்படைக் கப்பல்க ளுக்கு உணவு, குடிநீர், எரிபொருட்களை அ 521 என்ற விநியோகக் கப்பலுடன் அ 520 என்ற இந்தக் கப்பலே எடுத்துச் சென்றிருந்தது.

அதுபோன்றே 2007 ஒக்டோபரில் தெய் வேந்திரமுனையில் இருந்து தென்திசையில் 2600கி.மீ தொலைவில் புலிகளின் மற்றொரு ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போதும் "சயுர', "சாகர', "சுரனிமல' ஆகிய போர்க் கப் பல்களுக்கு விநியோகப் பொருட்களை இந்தக் கப்பலே எடுத்துச் சென்றிருந்ததாக கடற்படை தெரிவித் திருந்தது. இந்தக் கப்பல்கள் தாக்கு தலை முடித்து திருகோணமலை திரும்பிய போது பாரிய இராணுவ மரியாதைகள் வழங் கப்பட்டதுடன் ஜனாதிபதி மஹிந்தவே, நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்து வரவேற்றிருந் தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்படையின் பாரிய வெற்றியாக உரிமை கோரிய தாக்குதல்களின்போது பிரதான விநி யோகக் கப்பலாகப் பங்கேற்ற இந்தக் கப்பலை சாதாரணமாகவோ முக்கியத்துவமற்ற தென்றோ எடுத்துக் கொள்ள முடியாது. அத்து டன் இந்தத் தாக்குதல் கடற்படையின் தாக்கு தல் பலத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆனால் நேரடியாக இல்லாவிடினும், மறை முகமாக, இந்த இழப்பு கடற்படைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கடற்படையின் விநியோக நடவடிக் கைகளில் ஏற்படும் பாதிப்பானது வடக்குப் பகுதிக்கான விநியோகத்தையும் கடற்படை யின் ஆழ்கடல் நடவடிக்கைகளையும் பாதிக் கவே செய்யும்.

அதேவேளை, இந்தத் தாக்குதல் நடந்த போது அஷ்ரப் இறங்குதுறையில் இருந்து ஒரு கி.மீ தொலை வில் கடற்படையின் அதிவேகத் துருப்புக்காவியான "சக்தி' த?த்திருந்தது.

அதற்கு பின்னால் அரை கி.மீ தொலைவில் அ 520 நிறுத்தப்பட்டிருந்தது. எனவே புலிகள் "சக்தி' என்று கருதி இந்தக் கப்பலைத் தகர்த் திருக்கலாமோ என்றும் கடற்படையினர் தரப் பில் சந் தேகம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடற்புலிகளின் வரலாற்றைப் பார்த் தால், அவர்கள் விநியோக கட்டளைக் கப்பல்க ளையே தொடக்க காலத்திலிருந்து குறிவைத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1990 91இல் "எடிதாரா' மற்றும் "அபிதா' ஆகிய கட்டளைக் கப்பல்களின் மீதான தாக்குதல்களுக்கே கடற் கரும்புலிகளை முதன் முதலில் பயன்படுத்தி னர். ஆனால் அப்போது சேதங்களுடன் தப்பிக் கொண்ட இந்தக் கப்பல்கள் 1994 மற்றும் 95ஆம் ஆண்டுகளில் காங்கேசன்துறையில் வைத்து கட ற்கரும்புலிகளால் தாக்கி அழிக்கப் பட்டது.

இதன் பின்னர் வடபகுதிக்கு துருப்புக்களை யும், விநியோகப் பொருட்களையும் கொண்டு செல்லும் "சக்தி', "வலம்புரி', "உகண' போன்ற பல கப்பல்களை புலிகள் தாக்கியிருந்தனர்.

இதில் "சக்தி' மட்டுமே தப்பிக்கொண்டது. தற் போதும் கடற்புலிகள் நிச்சயமாக பாரிய விநி யோகக் கப்பலைத் தாக்குவதற்கே திட்டமிட்டி ருக்க வாய்ப்புகள் உள்ளனவே தவிர, இதை ஒரு தற்செயலான சம்பவமாகக் கருதமுடியாது.

இவையெல்லாம் ஒரு புறத்தில் இருக்க, புலி கள் இந்தத் தாக்குதலை எவ்வாறு நிகழ்த்தினர்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கடற் படையினர் குழம்பிப் போய் உள்ளனர். ஏற்க னவே கடந்த மார்ச் 22ஆம் திகதி கடற்படை யின் அல்ரா அதிவேகத் தாக்குதல் படகு (க 438) நாயாறு கடலில் மர்மமான கடலடித் தாக் குதல் மூலம் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டி ருந்தது. இந்தநிலையில் திருமலைத் துறைமுகத்தில் வைத்து மற்றொரு கடலடித் தாக்குதல் மூலம் கடற் படையின் விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கடற்கரும்புலிக் கொமாண்டோக்களே இந்தத் தாக்குதலை நடத் தியதாகத் தெரிவித்துள்ள போதும் தாக்குத லில் எத்தனை கரும்புலிகள் இறந்தனர் என் றோ அல்லது அவர்களின் பெயர் விபரங்க ளையோ இப்பத்தி எழுதப்படும் வரையில் புலிகள் வெளியிட வில்லை.

நாயாறுத் தாக்குதல் நடந்த சில மணிநேரங்க ளுக்குள் உயிரிழந்த கடற்கரும்புலிகளின் விப ரங்களை வெளியிட்ட புலிகள், இந்தத் தாக்குத லில் கரும்புலி கள் உயிரிழந்தனரா என்பதை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு அவர் கள் தப்பி வருவதற்கான வாய்ப்பு இருந்திருக்க வேண்டும் என்பதே காரணமாக இருக்க வேண்டும்.

அத்துடன் இந்தத் தாக்குதல் எப்படி நிகழ்த் தப்பட் டது என்பது பற்றிய விபரங்களை வெளியிடுவதையும் புலிகள் தவிர்த்து வருகின் றனர். ஆனால் காந்தக்கு ண்டு ( கடற்கண்ணி வெடிபொருட்கள் ( ஏதாவது ஒன் றைச் சுமந்தபடி நீருக்கடியில் சுழியோடி வந்த ஒன்று அல் லது அதற்கும் மேற்பட்ட தற் கொலைப்படையினரே தாக்குதலை நடத்திய தாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடந்து சில தினங்களின் பின்னர் கடற்படை சுழியோடிகளால் மனித சடலம் ஒன் றின் அடிப்பாகமும் சுழியோடும் சாதனங்க ளும் மீட்கப்பட்ட தாக கடற்படை தெரிவித் திருந்தது. இதைக் கொண்டு சுழியோடிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் கடற்படை தரப்பில் தெ? விக்கப்படுகிறது. ஆனால் வெளியில் கடற் படை அதிகாரிகள் இவ்வாறு கூறிக் கொண்டா லும் கடற்பு லிகளின் புதிய தாக்குதல் உத்தி பற்றி அவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின் றனர்.

நாயாறு தாக்குதல் நடந்து இரண்டு மாதங்க ளாகிவிட்டது. ஆனாலும் அது பற்றிய புதிர் களே விடுபடவில்லை. தாக்கப்பட்ட அதிவேக தாக்குதல் படகு நகர்ந்து கொண்டிருந்ததா நிறுத்தப்பட்டிருந்ததா என்பதே இன்னும் கடற் படை விசாரணையாளர்களால் கண்டறியப்பட வில்லை. அ 520 கப்பல் ?ழ்கடிக்கப்பட்ட பின்னர் நாயாறு தாக்குதலும் படகு தரித்து நின்ற போது நடந்திருக்குமா என்ற சந்தே கத்தை ஏற்படுத்தியிருக்கி றது.

திருகோணமலைத் துறைமுகத்தினுள் ஊடு ருவிச்சென்று தாக்குதல் நடத்துவது ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஒரு டசினுக்கும் குறை யாத அதிவேகத் தாக்குதல் படகுகள், ரோந்துப் படகுகள் எந்த நேரமும் துறைமுகத்தைச் சுற் றிக் கொண்டிருப்பதுடன், கடலுக்கு அடியில் நீந்திச் செல்வோரைத் தடுப்பதற்காக சில நிமிட இடைவெளிக்கு ஒரு தடவை கடற்படையின் டிங்கிப் படகுகள் "டைனமற்'றை வெடிக்க வைத்து அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கும்.

இதைவிட துறைமுகத்தினுள் எவரும் கட லின் அடிப்புறத்தால் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு தடுப்புவேலிகளும் போடப்பட்டுள் ளன. இவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு கடற்புலிகள் எவ்வாறு உட்புகுந் தனர் என்பதே முக்கியமான வினாவாகும்.

துறைமுகத் தின் தென்பகுதியில் கடலுக்கு அடியிலான பாதுகா ப்பு கம்பிவேலி அமைக் கப்படவில்லை என்றும் வடக்குப் பகுதியில் மட்டுமே அது போடப்பட்டிருப்பதாகவும் அதில் கூட பல குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருப்பினும், புலிகள் ஊடுருவியது எவ்வாறு என்பதைக் கண்டறிந் தால் தான் அடுத்த தாக்குதலைத் தடுக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் கடற்படை சிக்கிப் போயுள்ளது.

துறைமுகத்தின் வெளிப்பகுதியூடாக கரும் புலிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பில்லை என் றும், சீனன்குடாவை அடுத்துள்ள குடியிருப்புப் பகுதிகளினூடாக அல்லது கடவானை காட் டுப் பகுதியூடாகவே கரும்புலிகளின் அணி துறைமுகத்தினுள் பிரவேசித்திருக்கலாம் என் றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் நிச்சய மான ஊடு ருவல் வழி எது என்பது இன்னமும் உறுதிப்படுத் தப்படவில்லை.

அதேவேளை கடற்புலிகள் இரண்டாவது மற் றும் மூன்றாவது கட்ட ஈழப்போர்களில் பயன் படுத்தியது போன்ற சுழியோடிச் சென்று தாக்கு தல் நடத்தும் பாணியில் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றே தெரிகிறது. கடற்புலிகள் கரும்புலித் தாக்குதலை, பட குகளின் மூலம் சென்று தகர்க்கும் உத்தியைப் பயன்படுத்தியும், நீரடி நீச்சல் பிரிவு என்ற சுழியோடி களைக் கொண்டும் நடத்தியிருக்கின்றனர். ஆனால் இறுதியாக நடந்திருக்கும் இரு தாக்குதல்க ளுமே இவ ற்றிலிருந்து வித்தியாசப்பட்டிருப் பதைக் காண?டிகிறது.

இந்தத் தாக்குதலை "கங்கைஅமரன் நீரடி நீச் சல் பிரிவு' கொமாண்டோக்களே நடத்தியதாக புலிகள் அறிவித்திருந்தனர். லெப்.கேணல் கங்கைஅமரன் 2001 ஜுன் 29ஆம் திகதி மன் னார் ஆனைவிழுந்தான் பகுதியில் இராணுவத் தின் ஆழஊடுருவும் அணியினர் நடத் திய கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தார். இறக் கும்போது அவர் கடற்புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தார். ஆனால் கடற்புலிகள் அமை ப்பு ஆரம்பித்த காலம் முதல் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசைக்கு அடுத்த நிலையில், கடற் புலிகளின் தளபதி என்ற நிலையில் இருந்து பெருமள வான தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

கடற்புலிகளின் மிக முக்கியமான தளபதி யாக இருந்த கங்கைஅமரனின் பெயரில் தான் புலிகள் புதிய நீரடி நீச்சல் பி?வை ஆரம்பித் திருக்கின்றனர். இந்தப் பிரிவு உருவாக்கப்பட் டிருப்பதே திருமலைத் தாக்குதலின் பின்னர் தான் வெளிச்சத்துக்கு வந்தது. அதுவும் புலி கள் அறிவித்த பின்பு தான் கடற்படைக்கே தெரியும். கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவை ஏற் கனவே கொண்டிருக்கின்ற நிலையில் இன் னொரு பெயரில் புதிய பிரிவு தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

1994ஆம் ஆண்டில் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற "அபிதா' என்ற கடற் படை விநி யோகக் கப்பலை கப்டன் அங்கயற் கண்ணி என்ற பெண் கரும்புலி சுழியோடிச் சென்று குண்டு வைத்துத் தகர்த்திருந்தார்.

அதன்பின்னர் திருமலைத் துறைமுகம், காங் கேசன்துறைத் துறை?கம், காரைநகர் கடற் படைத்தளம் என்று கடற்புலிகளின் சுழியோடி கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு கடலுக்கு அடியில் நீந்திச் சென்று தாக்குதலை நடத்தும் கரும்புலிகளைக் கொண்ட இரண்டு பிரிவுகளை புலிகள் உரு வாக்கியிருந்தனர். "அங்கயற் கண்ணி நீரடி நீச் சல் பிரிவு' என்று பெண் கடற்புலி களின் பிரிவுக்கும், "சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு' என்று ஆண் கடற்புலிகளின் பிரிவுக்கும் பெயரிடப் பட்டிருந்தது. இந்தநிலையில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த நீரடி நீச்சல் பிரிவுகளுக்கு கங்கைஅமரனின் பெயர் சூட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

எனவே புதிதாக ஒரு நீரடி நீச்சல் பிரிவு உரு வாக்கப்பட்டிருக்கிறது என்றே கருதவேண்டும்.

அத்தகைய நீரடி நீச்சல் பிரிவு நிச்சயமாக வேறு வகையான உத்திகள், உபகரணங்க ளைக் கொண்டிருக்க வேண்டும். நீருக்கு அடி யில் பயணம் செய்யும் ஸ்கூட்டர்கள் அல்லது மனித டோபிடோ போன்றவற்றை பயன்படுத் தும் வகையில் இந்த நீரடி நீச்சல் பிரிவு உரு வாக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகி றது.

அதைவிட திருமலைத் தாக்குதலுக்கு கடற் புலிகள் பயன்படுத்திய படகுக்கான இயந்திரம் உள்ளூரில் வடிவமைக்கப்பட்டதாக கடற்புலிக ளின் சிறப்புத் தளபதி தெ?வித்திருக்கும் தகவல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 10ஆம் திகதி திருமலைத் தாக்குதல் நடை பெற்ற தினத்தன்று முல்லைத்தீவில் நடை பெற்ற லெப்.கேணல் கடாபி என்ற கடற்புலிக ளின் பிரதம இயந்திரப் பொறியியலாளரின் இறுதி வணக்க நிகழ் வில் தான் கேணல் சூø இந்தத் தகவலை வெளி யிட்டிருக்கிறார். திரு மலைத் தாக்குதலுக்குப் பயன்படு த்தப்பட்ட படகின் இயந்திரத்தை லெப்.கேணல் கடா பியே வடிவமைத்ததாக அவர் தெரிவித்திருந் தார்.

சாதாரணமாக கடற்கரும்புலிகளின் படகுக ளுக்கு அதிவேக வெளியிணைப்பு இயந்திரங் களே பயன்படுத் தப்படுவது வழக்கம். அதில் வடிவமைப்பு செய்வதற்கு எந்த வேலையும் இருக்காது. ஆனால் திருமலைத் தாக்குதலுக் கான இயந்திரத்தை லெப்.கேணல் கடாபி யே வடிவமைத்ததாக கேணல் சூசை தெரிவித்தி ருப்பதானது புதிய வகையான தாக்குதல் ஊட கம் ஒன் றைப் புலிகள் உருவாக்கியிருப்பதை உறுதி செய்கிறது.

அடுத்து திருமலைத் தாக்குதலில் கடலுக்கு மேலாகப் பயணிக்கும் எந்தப் படகையும் புலிகள் பயன்படுத்தவில்லை என்பதை கடற்படை உறுதியாகச் சொல்கிறது. கடற்படையின் தீவிர கண்காணிப்பை மீறி துறைமு க்தினுள் புகுவது ஒன்றும் சாதாரணமா னதல்ல. அப்படிப் புகுந் தாலும் ராடர்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

அதேவேளை இந்தத் தாக்குதலுக்கு படகு பயன்படுத்தப்பட்டதாக கேணல் சூசை தெரிவித்திருப்பது கடலுக்கு அடியில் பயணிக்கும் ஊடகம் அல்லது படகைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவற் றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீரக்கடி யில் பயணிக்கக் கூடிய நீர்ழ்கியை ஒத்த சாத னங்களை கடற்புலிகள் தாமே உருவாக்கியிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நாயாறு கடலில் கடற்படையின் சிறிய தாக்குதல் படகான க 438 இல் பரிட்சித் துப் பார்க்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமே திருகோணமலைத் துறைமுகத்தினுள் விநியோ கக் கப்பல் அழிப்புக்கும் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது. தற்போது புலிகள் தொழில்நுட்ப ரிதியாக பெற்று வரும் வளர்ச்சியும் அவர்களின் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களும் மேலும் புதிய தாக்குதல்க ளுக்கான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கி றது.

குறிப்பாக புலிகளின் கடல்வழி விநியோகத் துக்குத் தடைக்கல்லாக இருக்கின்ற கடற்படை யில் ஆழ் கடல் ரோந்துப் படகுகள், அதிவேக ஏவுகணைப் படகுகள், பீரங்கிப் படகுகளே அடுத்தடுத்த கட்டங்களில் கடற்புலிகளின் நீர டித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்புகள் இருக் கின்றன. அத்துடன் வடபகுதிக்கான விநி யோகங்களைத் தடுக்கின்ற தாக்குதல்களுக்கும் இத் தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்த லாம்.

இவையெல்லாம் கடற்படையின் அøவியக்கத் தையும், தாக்குதல் திறனையும் பெரிதும் பாதிக்கக் கூடும் என்றே கடற்போரியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments: