வன்னிப் பகுதியில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு சத்தூட்டம்கொண்ட பால் வழங்குவதற்கு யுனிசெப்பின் ஊடாக வழங்க மனிதநேயப் பணிகள் தொடர்பாக ஆலோசனைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
“போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக திரிபோசா வழங்கப்படுவதுடன், சிறுவர்களுக்கும் போசாக்கூட்டும் திட்டத்துக்கு அமைய சத்துணவும் வழங்கப்படும்” என சுகாதாரசேவைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு திரிபோசா வழங்கும் திட்டத்துக்கு யுனிசெப் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பி.சிவகீதா மனித நேயப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவைத் தொடர்புகொண்டு கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் 28 சிறுவர் போராளிகள் குறித்து கடந்த செவ்வாய்கிழமை யுனிசெப்பின் இலங்கைக்கான பணிப்பாளர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் உள்ளிட்ட உயர்மட்டக்குழு கூடி ஆராய்ந்துள்ளது.
No comments:
Post a Comment