Monday, 26 May 2008

மட்டகளப்பில் படைகுவிப்பு:தமிழ் முஸ்லீம் பகுதிகளில் ஒருவகை பதட்டம்:பாதுகாப்பு உசார் நிலையில்!

மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி, ஆரையம்பதி பகுதிகளில் கடந்த வியாழகிழமை இடம்பெற்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட கொலைசம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகள் முதல் மட்டகளப்பு மாவட்டம் முழுவதும் படையினர் பாதுகாப்பை பலபடுத்திவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழகிழமை இடம்பெற்ற கொலைகளை தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஆட் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக மட்டகளப்பிலிருந்து தென் இலங்கைவரும் பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.அத்துடன் மட்டகளப்பின் சில பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் வெளியிடபட்ட வேட்டை தொடரும் என்ற தலைப்பிலான வாசகங்களும் மக்கள் பார்வைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந் நிலையில் இன்றும் மட்டகளப்பின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு மாறாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.இதையொட்டி தற்போது அங்கு படையினரது பிரசன்னம் அதிகரிக்கபட்டு பாதுகாப்பு உசார்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

பொலிஸ் இராணுவம் மற்றும் விசேட அதிரடிபடையினரும் கனரக ஆயுதங்கள் சகிதம் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி உட்பட இன்னும் பல தமிழ் - முஸ்லிம் கிராமங்களில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் நம்பகரமாக தெரிவிக்கின்றன.

No comments: