Wednesday, 21 May 2008

விண்ணிலும் மண்ணிலும் புலிகள் வெல்வர். வைகோ

'இலங்கை கிழக்குப் பகுதியை புலிகளிளிடமிருந்து மீட்டெடுத்து எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இங்கு அமைதி நிலவுகிறது. புலிகைளை நாங்கள் அழித்து விட்டோம் என்று இலங்கை அரச அதிபர் மஹிந்த கூறுகிறார். இவையனைத்தும் முழுப் பொய். புலிகள் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள்.' என்று தமிழக மூத்த அரசியல்வாதியும் , ஈழத்தமிழர் ஆதரவாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கிழக்கை கைப்பற்றி விட்டோம் என்று மார் தட்டுகிறார். அங்கிருந்து புலிகளை முற்றக தூரத்திவிட்டோம், கிழக்கு மக்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து மீட்டு, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம் என்று கூறுகிறார். இது உண்மையல்ல. மாறாக சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகம்.

விடுதலைப் புலிகள் மண்ணிலும் விண்ணிலும் வெற்றி பெறுவர்.
கிழக்கில் இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தியுள்ளோம். அங்கு அமைதி நிலவுகிறது. புலிகளை அழித்து விட்டோம் என்று மஹிந்த கூறுவது முற்றிலும் உண்மையல்ல.

புலிகள் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள். அதே சமயம் விண்ணிலும் வெற்றி பெறுவார்கள் என்றார் வைகோ.

நன்றி சுடர் ஒளி

No comments: