(3rd lead) கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணியளவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் விஹாரைக்கு முன்னால் உள்ள சோதனை சாவடிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் என் ஏ 2743 என்ற இலக்கத்தை கொண்ட பேரூந்து ஒன்றும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த இந்த பேருந்து பாதுகாப்பு படையினரை ஏற்றிசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றின் மீது குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மோதிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 3 பெண் காவல்துறையினர் உட்பட 6 காவல்துறையினரும் பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெருமளவானோர் காவல்துறையினர் என வைத்தியசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரசேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இன்று பகல் மருதானை சகிரா வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரச எதிர்ப்பு ஊர்வலம் ஜனதிபதி மாளிகையை நோக்கி வராமல் தடுப்பதற்காக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் கலகத் தடுப்பு காவல் துறையினர் சகிதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களில் ஒரு பஸ் மீது உந்துருளியில் வந்து மோதிய தற்கொலைதாரியுடன் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதன் அருகாமையில் இருந்த ஒரு முச்சக்கர வண்டி எரிந்து போயுள்ளது. மற்றும் ஒரு லொரியும் சில வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் இலக்கத்தகடும் அப்பகுதியில் வீழ்ந்து கிடந்தது. EP 3875 என்ற இலக்கத்தகடே அப்பகுதியில் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் செல்ல சுமார் ஒரு மணிநேரம் வரை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குண்டுவெடித்த பகுதி கொழும்பின்; அதி உயர் பாதுகாப்பு வலையங்களில் ஒன்றாகும்.
பிரமுகர்களின் நடமாட்டமும் இந்தப் பிரதேசத்தில் அதிகம். குறிப்பாக குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம் இனாதிபதி மாளிகை, வான்படைத் தலைமையகம், 5 நட்சத்திர விடுதிகள், மின்சார திணைக்கள் தலைமையகம், அரச வங்கிகளின் தலைமையகங்கள், லேக்கவுஸ், பளைய நாடாளுமன்ற கட்டடம் என பல முக்கிய மையங்களை அண்மித்துள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் எதிர்பார்கக்ப்படுகின்றன.......................
No comments:
Post a Comment