Thursday, 15 May 2008

இந்தோனேசியாவில் 7 இலஙகையர் கைது

indonesia-police.jpgஇந்தோனேசியாவில் 7 இலஙகையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தேனேசியாவின் கும்பங் என்ற மாகாணத்தில், கிழக்கு நூஸா தெங்கார என்ற இடத்தில் இவர்கள் கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என மாகாண காவல்துறை ஆணையாளர் மர்தன் ரஜ்ட்தா தெரிவித்துள்ளார்.


இவர்கள் தம்மை இந்தியர்கள் என கூறியதாகவும் பின்னர் இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் எனக் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


கும்பங்கில் உள்ள கிராமத்தில் வீடொன்றில் தங்கியிருந்த இந்த 7 பேரில் 4 பேருக்கு கடவூச்சீட்டுகளோ, குடிவரவு ஆவணங்களோ இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்த்ரேலியாவுக்கு செல்லும் நோக்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கும்பங் பிரதேசத்தில் இருந்தே சீன மற்றும் ஏனைய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோமாக அயல் நாடுகளுக்கு குடியேற்றபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து முகவர்கள் ஊடாக அவுஸ்ரேலியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் செல்பவர்கள் இந்தோனேசியாவில் தரித்து நிற்பது வளக்கம் எனவும் இவர்கள் விடுதலைப் புலிகளாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் பிற்தொரு இந்தோனேசியத் தகவல் தெரிவிக்கின்றது.


source:குளோபல் தமிழ்செய்திகளில் இருந்து

No comments: