Tuesday, 13 May 2008

விமல் வீரவன்ச குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ரில்வின் சில்வா

விமல் வீரவன்ஸ தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் அதிருப்திக் குழு புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளமை குறித்து, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாப்பிற்கமைய கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நபர் ஒருவர் வேறொரு கட்சியின் அங்கத்துவத்தினை பெறமுடியாதென ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்துவத்தினை பெற்ற ஒருவர் வேறொரு கட்சியினை ஸ்தாபித்தாலோ அல்லது வேறொரு கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றாலோ, மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்துவம் இயல்பாக ரத்தாவதுடன் இந்த விடயம் அரசியலமைப்பு சிக்கலாக உருவெடுக்குமெனவும் அவர் கூறினார்.

எனினும் புதிய கட்சி ஸ்தாபித்தால் அவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி குறித்து சிக்கல் நிலை தோன்றுமெனவும், கட்சி அங்கத்துவம் ரத்துச் செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர் பதவி சட்டரீதியாக அற்றுப்போகுமெனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இதேவேளை விமல் வீரவன்ச தலைமையிலான குழு புதிய கட்சியொன்றை பதிவு செய்வதற்கான ஆவணங்களை நேற்று தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்ததாகவும், தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் இந்தக் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக புதிய கட்சியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக்க குறிப்பிட்டார்.

No comments: