Sunday, 4 May 2008

யாகூவை வாங்கும் திட்டம் : கைவிட்டது மைக்ரோசாப்ட்

நியூயார்க்: யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விலை முடிவாகவில்லை என்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முயற்சியைக் கைவிட்டது.யாகூவை வாங்க 4,750 கோடி ரூபாய் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால், யாகூ நிறுவனம் 5,700 கோடி கேட்டது. இதுதொடர்பாக, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவன் ஏ.பால்மெர் மற்றும் யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் இடையே சியாட்டில் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, யாகூவை விலைக்கு வாங்கும் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட் விலகிக் கொண்டது.

No comments: