அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று கோமாரி என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:15 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டூள்ளது.
வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட சிறிலங்காப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் படுகாயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிளைமோர்த் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்கலங்கள தேடுதலில் ஈடுபட்ட படையினர் மீட்டுள்ளனர் என்று சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment