Thursday, 22 May 2008

மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர் விமல் கட்சியின் முக்கியஸ்தர்

nff-vimal.jpgமட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை சிப்பாய் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமல் வீரவன்ஸவை தலைவராக கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான பிரியங்கர வீரகுமார திசாநாயக்க என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இவர் மட்டக்களப்பு காவல்துறையில் பணியாற்றி வந்தார் எனவும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவினர் நேற்று முன்தினம் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரும்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

No comments: