முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது. |
அந்த ஏட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதுடன் நின்று விடாது, முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஓர் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார் எனக்கூறின் அது மிகைப்படாது. கட்சித் தாவலில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே காணப்பட்டார். எனினும் மகிந்தவின் ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பை அடுத்து அவர் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் மட்டுமே முஸ்லிம் முதலமைச்சர் என்ற இலக்கை அடைய முடியும் என்ற வார்த்தைகளை நம்பி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஏமாற்றமடைந்துள்ளார். ஏற்கனவே பிள்ளையான் என்ற கறுப்பு ஆடு ஆளும் கட்சி சார்பில் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தருணத்தில் எவ்வாறு முதலமைச்சர் பதவி சாத்தியப்படும் என்பதை சிந்திக்க முடியாத அடிப்படை அரசியல் சாணக்கியமற்ற ஒருவராகவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நோக்கத் தோன்றுகிறது. தற்போதைய தேர்தல் முறைமைகளின் காரணமாக எந்தவித முன் அனுபவமும் இன்றி நாடாளுமன்றத்திற்குள் இலகுவாக பிரவேசிக்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. பல இளம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமது ஆளுமை மீது அதீத நம்பிக்கைக் கொண்டு அவர்கள் ஆபத்தான முயற்சிகளில் குதிக்க விளைகின்றனர். முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் உருவாவதை தடுத்து துரோகச் செயலில் ஈடுபடுவதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தியிருந்தார். எனினும், அதே சுட்டுவிரல் இன்று வேறு ஒருவரை நோக்கிச் சுட்டப்படுகின்றது. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நேர்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அதற்கு ஆதரவு வழங்கத் தயார் என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். எனினும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது அவரது நேர்மை குறித்து சந்தேகம் ஏற்படுகின்றது. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் மக்கள் மீது காட்டும் கரிசனை போலியான ஒன்று என்பதனை நிரூபிக்க முடியும். மாகாண சபை உறுப்பினர் என்ற போதிலும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதன் ஊடாக அரசாங்கதிற்கும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான பிணைப்பு தெளிவாகப் புலனாகிறது என்பதே எமது வாதம். இந்தக் குழப்பத்தை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனித்து உருவாக்கினார். எனவே அவரே இதனைத் தனித்து தீர்க்க வேண்டும். பிறந்த உடனேயே கிழக்கு மாகாண சபையை கொலை செய்வது ஓர் பயனற்ற செயலாகும். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் அதுவும் நிலைக்கக்கூடிய வாய்ப்பில்லை. எனினும், இந்த நிலைமை சொந்த விரல்களினால் கண்களைக் குத்துவதற்கு சமமான ஒன்றாகும். எதிர்க்கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் முதலமைச்சர் என்ற போலி மாத்திரையை விழுங்கிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமையும். சுயலாப நோக்கங்களுக்காக இரண்டு பாதைகளில் பயணிப்போருக்கு இறுதியில் என்ன நேரும் என்பதனை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உணர்ந்துகொள்ள வாய்ப்பு கிட்டும் என்பதே எனது ஆழமான கருத்தாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, 22 May 2008
முஸ்லிம்களின் மீதான ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதே: "த மோர்ணிங் லீடர்"
Subscribe to:
Post Comments (Atom)

முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது.
No comments:
Post a Comment