மட்டக்களப்பில் இளம் பெண்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக் கொடூரங்களில் ஈடுபட்டமையாலே சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. |
அந்த வார ஏட்டின் கட்டுரை ஒன்றில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: மார்ச் 3 ஆம் நாள் நள்ளிரவு 12:20 மணியளவில் 6 துப்பாக்கிதாரிகள் பலவந்தமாக லோகேஸ்வரனின் வீட்டிற்குள் புகுந்தனர். "புஸ்பராணி எங்கே?" என அவர்கள் கேட்டார்கள். ஆயுததாரிகளைப் பார்த்து லோகேஸ்வரன் அதிர்ச்சியடைந்தார். ஆழிப்பேரழிவின் கோர சீற்றத்திற்கு தமது சொந்தங்களை எல்லாம் பறிகொடுத்தன் பின்னர் லோகஸ்வரனும் அவரது சகோதரியும் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். புஸ்பராணி இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு தயாராகி வந்தார். ஆயுததாரிகள் புஸ்பராணியின் கைகளையும், கால்களையும் கட்டி வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர். தன்னை காப்பாற்றுமாறு லோகேஸ்வரனின் தங்கை ஓலமிட்டார். எனினும் அந்தக் கணப்பொழுதில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது தங்கையை கடத்திச் சென்று விட்டார்கள் என லோகஸ்வரன் கண்ணீர் மல்க தெரிவித்தார். அதே நாளில் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த யோகநாதன் யசோதா என்ற இளம் பெண்ணை ஐந்து ஆயுததாரிகள் வெள்ளை வானில் கடத்திச் சென்றுள்ளனர். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கடத்தல்காரர்கள் கடத்தப்பட்ட பெண்களின் பெயர்களை விசாரித்துள்ளனர். மட்டக்களப்பு அழகுக்கலை நிலையமொன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும் கடத்தப்பட்ட மூன்றாவது பெண் ஆவார். கடந்த மார்ச் மாதம் 9 ஆம் நாள் வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளது. எனினும், ஆயுதக்குழுவிற்கு இருக்கும் அச்சம் காரணமாக வேறு தகவல்களை வெளியிட உறவினர்கள் மறுத்து விட்டனர். இரண்டு இளம் பெண்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய சமாதானப் பேரவை கடந்த 18 ஆம் நாள் வெளியான ஞாயிறு பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருந்தது. இதில் முதலாமவர் தேர்தல் நடைபெற்ற நாள் அன்று கல்முனைப் பிரதேசத்தில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழு, இந்த பாதகச் செயலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக காவல் நிலையத்திற்குச் சென்ற அப்பெண்ணின் தயார் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தேர்தல் பணிகளில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதனால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அக்குழுவினர் மீண்டும் வீட்டுக்கு வந்து இளம் பெண்ணின் அக்காவையும் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண்களை கடத்தப்படுவது தொடர்பான பீதி ஏற்பட்டுள்ளது. சில பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதனை நிறுத்தியுள்ளனர். இளம் பெண்கள் கடத்தப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய முடியாமல் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கின்றது. மேலும், இளம் பெண்கள் கடத்தப்படுவது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட குரோதமோ அல்லது போராட்டத்தில் இணைத்துக்கொள்ளும் நோக்கிலோ இளம் பெண்கள் கடத்தப்படவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த சில பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிள்ளையான் குழுவினரைத் தவிர்ந்த வேறு குழுவினருக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திச் செல்ல அனுமதியில்லை. அப்படியானல் பெண் பிள்ளைகளைப் பெற்ற எந்தத் தாயாவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மனமுவந்து வாக்களித்திருக்க சாத்தியம் உண்டா? வரலாற்றுக் காலம் முதல் தமிழ்ப் பெண்கள் கற்பு ஒழுக்கத்தை மிக உன்னதமாக போற்றி பாதுகாக்கின்றனர். தமது உடலை மாற்றான் ஒருவருக்கு அளிப்பதனை விட உயிரை மாய்த்துக் கொள்வது சிறந்தது எனவே தமிழ்ப் பெண்கள் கருதுகின்றனர். கிழக்குத் தேர்தல்களில் தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிக்காமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணியாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகளவான முஸ்லிம் உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். இறுதியில் இந்நிலைமை அரசாங்கத்திற்கு பாதகமான விளைவை ஏற்படுத்தியது. முதலமைச்சர் தெரிவில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இந்நிலைமை முக்கிய ஏதுவாக அமைந்தது. பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக இதுவரையில் அறியக்கிடைக்கவில்லை என்று "த மோர்ணிங் லீடர்" ஏடு தெரிவித்துள்ளது. |
Friday, 23 May 2008
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாலேயே பிள்ளையான் கும்பலுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை: "த மோர்ணிங் லீடர்"
Subscribe to:
Post Comments (Atom)

மட்டக்களப்பில் இளம் பெண்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக் கொடூரங்களில் ஈடுபட்டமையாலே சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment