Saturday, 17 May 2008

ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைக்க விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக செய்தி

ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் இந்த சதியில் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் உடந்தையாக செயற்படுவதாகவும் தெரியவருகிறது.

ஜே.வி.பி.யின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் மீது இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: