கிழக்கு மாகாணசபையின் முதல் அமர்வின்போது பிள்ளையான் தலைமையிலான நிர்வாகத்தை தோற்கடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான முனைப்புகளில் ஆளும் கட்சியில் இருந்து தனித்து செயற்படமுடிவெடுத்துள்ள ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஐக்கிய தேசியகட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு என்பன முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பிள்ளையானை இரண்டரை வருடங்களுக்கும் ஹிஸ்புல்லாவை இரண்டரை வருடங்களுக்கும் முதலமைச்சர் பதவியை ஏற்குமாறு கேட்கப்பட்டது. எனினும் அதனை ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையி;ல் வெளியேறியுள்ளார். இதேவேளை பிள்ளையான் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டமையானது, அரசியலமைப்புக்கு முரணான செயல் என ஐக்கிய தேசியக்கட்சியி;ன் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையில் எதிர்கட்சிகள் பலம் கூடியுள்ள நிலையில் இந்த நியமனம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அத்தாவுல்லா அரசாங்கத்திற்கு ஆதரவு
கிழக்கு மாகாணத்திற்கு ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்காமையை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் தமது எதிர்ப்புகளை காட்டிவருகின்றனர். எனினும் தமது எதிர்ப்பை அமைச்சர் ஏ எல் எம் அத்தாவுல்லாஹ் விலக்கிக்கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் முஸ்லிம் அமைச்சர்களுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பிள்ளையான் தலைமையிலான அமைச்சரவையில் தமது ஒரு உறுப்பினரையும் நியமிக்க அத்தாவுல்லாஹ் இணங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவிற்கான ஆதரவு வலுக்கிறது
கிழக்கு மாகாணசபையில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தமது ஆதரவை வழங்க மற்றும் ஒரு உறுப்பினர் முன்வந்துள்ளார். இதனையடுத்து ஆளும் கட்சிக்குள் ஹிஸ்புல்லாஹ்வின் எதிர்தரப்பின் தொகை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொகை இன்னும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2nd lead
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக் குழுவின் தலைவரான பிள்ளையான் நியமிக்கப்பட்டதனை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைச்சர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவை எதிர்ப்பதற்கு பல முஸ்லிம் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்த முஸ்லிம் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், அமீர் அலி, அப்துல் மஜூட் பேன்றவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை துறந்து நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க முயற்சித்து வருகின்றனர்.
எம்மை அரச தலைவர் முற்றாக புறம் தள்ளி உள்ளார். எனவே அரசிற்கான எமது ஆதரவு தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய உள்ளோம் என்று ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எமது முடிவை நாம் எதிர்வரும் நாட்களில் அறிவிப்போம். மகிந்த ராஜபக்ச எம்மை மட்டும் புறம் தள்ளவில்லை. முழு முஸ்லிம் சமூகத்தையும் புறம் தள்ளியுள்ளார். அவர் தனது செல்லை காப்பாற்றுவது கிடையாது. எமக்கு போலியான உறுதிமொழிகளை மகிந்த அளித்துள்ளார். எனவே தான் நாம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வினை புறக்கணித்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் முடிவால் ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டத்தினை நேற்று சனிக்கிழமை கூட்டிய போதும் அமைச்சர் பேரியல் அஸ்ரப் வெளிநாட்டில் இருந்து வரும் வரையில் தமது எதிர்கால நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தரும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை நேற்று நான்காக உயர்ந்தள்ளதாகவும், மற்றுமொரு உறுப்பினரை சேர்த்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment