வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர்.
கிளாலியில் விடுதலைப்புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் ஒருவர் நேற்று முன்தினம் காயமடைந்துள்ளார்.
விளாவெட்டிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் படையினன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மிதிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் நேற்று முன்தினம் காயமடைந்துள்ளார். இத்தகவல்கள் சிறிலங்காப் படையினரால் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மை நாட்களாக வடகளமுனைகளில் படையினருக்கு இவ்வாறன இழப்புக்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Saturday, 17 May 2008
விளாவெட்டிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் படையினன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment