Saturday, 17 May 2008

வன்னிப்படைத் தலைமையகத்திற்குஇராணுவத் தளபதி நேற்று விஜயம்-

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா நேற்றுக் காலை வன்னிக் கூட்டுப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து களமுனை பாதுகாப்பு நிலைவர மீளாய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

இராணுவத் தளபதி தலைமையில் சென்ற உயர் மட்டக்குழுவினரை வன்னி மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வர வேற்றார்.

அதனையடுத்து வன்னிக்கூட்டுப்படைத் தலைமையகத்தில் கள முனைத் தளபதிகளுடன் இராணுவத் தளபதி விசேட கலந்துரை யாடல்களை நடத்தினார்.இந்தக் கலந்துரையாடல்களில் களமுனையில் உள்ள பல்வேறுபட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் களமுனை நிலவரம் குறித்து மீளாய்வு செய்த இராணுவத் தளபதி மேலதிக அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் களமுனை தளபதிகளுக்கு வழங்கினார். இந்தக் கலந்துரையாடலில் களமுனையில் உள்ள படையணிகளின் தளபதிகள் மற்றும் பிரிகேடியகர்கள் உட்பட மேலும் பலர் படைஅதிகாரிகள் கலந்துகொண்டனர்-
virakesari

1 comment:

ttpian said...

sarath fonseka is suffering from dysentry:kindly permit him to go to toilet!