Thursday, 15 May 2008

கிழக்கு முதலமைச்சர் நியமனத்;தில் தொடர்ந்தும் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கம்

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கல்நிலை குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாணசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி நேற்று நடத்தியிருந்ததன் பின்னணிலேயே கிழக்கு மாகாணசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவிருந்த கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி நேற்றையதினம் நடத்திய பேச்சுவார்;த்தைகளின் பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நியமனம் தொடர்பில் ஆளும் கட்சி தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்நோக்கிவருவதாகத் தெரியவருகிறது.

லண்டனிலிருந்து நேற்று நாடுதிரும்பியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், நேற்றிரவு அரசாங்கத்தின் உயர்;மட்ட அமைச்சர்களைச் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார். நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் யாரென்பது பற்றி ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பார் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

No comments: