Thursday, 15 May 2008

மன்னார், கூராயப்பகுதியில் கிளேமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார், கூராயப்பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோதே கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த காத்தமுத்து கணபதி (வயது 29) என்பவரே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: