Tuesday, 27 May 2008

லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைச் சந்தேகநபர்கள் ஐவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐந்த சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷாந்த ஹப்புவாராய்ச்சி உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து சந்தேகநபர்களான மாணிக்கம் தமிழினியன், ரட்ணம் ஜனகன், ஐயர் ராஜ்குமார், சிவராஜ் சிவராம் மற்றும் காளிமுத்து திருக்குமார் ஆகியோர் குறிப்பிட்ட காலத்துக்கு தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டமையால் அவர்களை விடுவிக்குமாறு நேற்று திங்கட்கிழமை கொழும்பு நீதிமன்றம் சட்டமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தது.

சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சொலிசிட்ட ஜென்ரல், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார். கதிர்காமரின் வீட்டைப் புகைப்படம் பிடித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபரான ஐயர் ராஜ்குமார் சிறைச்சாலையிலிருந்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவரை நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

No comments: