மாகாண சபை முதலமைச்சர்களின் மாநாட்டுக்கு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாகாண முதலமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 29,30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பிள்ளையான் கலந்துகொள்வார் என மாகாண முதல்வர்களிகள் சம்மேளணத்தின் தலைவர் தென் மாகாண முதலமைச்சர் ஷhன் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
இம்முறை முதலமைச்சர்கள் மாநாட்டில் 13வது அரசியலமைப்பு திருத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, காவல்துறை, காணி உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற யோசனை மீண்டும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டபோதிலும், மத்திய அரசாங்கம் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Monday, 19 May 2008
முதலமைச்சர்களின் மகாநாட்டுக்கு பிள்ளையானும் அழைக்கப்பட்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment