Monday, 19 May 2008

இலங்கைக்கு வாக்களிக் வேண்டாம் என ஜிம்மி காட்டர் மையம் கோரிக்கை

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு இடம்பெறவுள்ள எதிரவரும் தேரதலில் இலங்கையை தேர்ந்தெடுக்க வேண்டாம் என அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மிகாட்டரின் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கடந்த வெள்ளிக் கிழமை விடுத்த அவசர அறிக்கையில் பாஹ்ரையின், யப்பான், பாகிஸ்த்தான், தென்கொரியா, இலங்கை, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகள் மனித உரிமைகள் சபை;பான ஆசிய ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

இதில் பாஹ்ரையின், யப்பான், பாகிஸ்த்தான், தென்கொரியா, ரிமோர் ஆகிய நாடுகள் இலங்கையுடன் ஒப்பிடும் போது மனித உரிமைகள் விடயத்தில் மேம்பட்டு இருப்பதாகவும், ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு காட்டுவதாகவும் அட்லான்டாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஜிம்மிகாட்டர் மையம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ் தொடரும் ஆட்கடத்தல், காணாமல் போதல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், அரசஆதரவுடனான ஆயுதக் குழுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக சிறுவர்களை படைகளில் சேர்த்தல், உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பாரிய அளவில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: