Monday, 19 May 2008

நோர்வேயை நம்புவதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை

சமாதான பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் ஏற்பாட்டு நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அண்மையில் இந்த விடயம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதில் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஒஸ்லோ விஜயத்தின் நோக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ன இலங்கையின் பெரும்பாலான மக்கள் நோர்வே போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிpழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒக்சிஜன் கொடு;த்ததாக குற்றம் சுமத்துகின்றனர்.

இதனையடுத்தே அந்த இயக்கம் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது என அமைச்சர் தெரிவித்தார். தமது நோர்வே விஜயத்தின் போது அமரிக்கா, ஐரொப்பியா மற்றும் நோர்வே என்பன தமிழீழ விடுதலைப்புலிகள் அர்ப்பணிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என தாம் எரிக் சொல்ஹெய்மிடம் கோரியதாக ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.

No comments: