ஜனநாயகத்தை எதிர்பார்த்த கிழக்கு மாகாண மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பு கை நழுவிப்போய் மீண்டும் புதியதொரு பயங்கரவாதத்திற்கு தேர்தல் வித்திட்டுள்ளது. மிக விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இனவாதம், அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள், ஊடகங்களின் அரசு சார்புத் தன்மை, நிதி போன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தியே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தேறியுள்ளது.
இத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான சூழ்நிலை காணப்படவில்லை.
தேர்தலன்று மக்களை வாக்களிக்க விடாது தடுத்து நிறுத்தி போலியான அடையாள அட்டைகளை தயாரித்து கள்ள வாக்குகள் போடப்பட்டன. அமைச்சர்கள், அரசாங்க முக்கியஸ்தர்கள் குண்டர்களை பயன்படுத்தி மேசமான வாக்குக் கொள்ளையில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் தமிழ் இனவாதத்தை முன்னெடுத்தது. ஹக்கீம் முஸ்லிம் இனவாதத்தை முன்னெடுத்தார். அத்தோடு அரசு தமது முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவிக்காது குழப்பகரமான நிலையில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் ஜே.வி.பி. இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராக தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தை பிடித்துக் கொண்டமை பெருமைக்குரியதாகும்.
எமக்கு வாக்களித்த மக்களுக்கு இத்தருணத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
1981 இல் வடக்கில் நூலகத்தை தீயிட்டுக் கொழுத்தி வாக்குகளை அபகரித்து அன்றைய ஐ.தே.க. அரசாங்கம் தேர்தலை நடத்தியது.
இதனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டனர். இதேநிலை இன்று கிழக்கிலும் தலைதூக்கியுள்ளது
Sunday, 11 May 2008
புதிய பயங்கரவாதத்திற்கு தேர்தல் வித்திட்டுள்ளது ஜே.வி.பி. குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment