அடுத்த சில நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தம்மை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.ற்கு அவர் அளித்த செவ்வியில், வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவர் தம்மை முதலமைச்சராக நியமிப்பார் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது 8 முஸ்லிம் உறுப்பினர்களும் 6 தமிழ் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தேர்தலுக்கு முன்னர் செய்துக்கொண்ட உடன்படிக்கையின்படி புதிய முதலமைச்சராக தாம் தெரிவு செய்யப்படுவதற்கு உரிமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அதிக விருப்புத்தெரிவு வாக்குகளை பெற்றவன் என்ற அடிப்படையில் தாமே முதலமைச்சராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாக்குகளின் அடிப்படையில் தமது கட்சிக்கு இரண்டு மேலதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நிராகரித்துள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, மேலதிக அதாவது போனஸ் ஆசனங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தாம் பதவிக்கு வந்தால், கிழக்கில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment