Tuesday, 13 May 2008

தமிழக மீனவர்க்கு ஆயிரம் கோடி நட்டம்: பழநெடுமாறன்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஆயிரம் கோடி இந்திய ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் நேற்று ஊடவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டில் இருந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து அப்பாவி மீனவர்களை படுகொலை செய்து வருகின்றனர்.

இதுவரை 300 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை சுட்டு கொல்லும் இலங்கை கடற்படையினர்இ சில சந்தர்ப்பங்களில் படகுகளை சேதமாக்கியும்இ மீன்களை அபகரித்து வருவதுடன் மீனவர்களை பிடித்துச் சென்று சித்திரவதை செய்து வருவதாகவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் 5வது மிக பெரிய கடற்படையான இந்திய கடற்படையினரால் இலங்ககை கடற்படையினரின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை. அத்துடன் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதில் இருந்து அவர்களை காப்பற்றவும் முடியவில்லை.


இது வெட்ககேடானது எனவும் நெடுமாறன் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக உணவு பொருட்களை அனுப்பவும் இந்திய அரசு தடைவிதித்துள்ளது.


இந்திய அரசின் இந்த தடையினால் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கெட்டழிந்து விட்டன. இந்த தடையை நீக்க கோரி தான் உண்ணவிரதம் இருந்த போதுஇ தமிழக முதல்வர் மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார், ஆனால் அதன் பிறகு எதுவும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் தேசிய இயக்க தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வருக்கு தான் எழுதிய கடித்திற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் அவரை சந்திக்க வேண்டும் என கோரி அனுப்பி கடித்திற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்கள் சிங்கள படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது போன்றுஇ இலங்கையிலும் தமிழர்கள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். இதனை எல்லாம் பார்க்கும் போதுஇ ராஜபக்ஸ ஆட்சியை விட தமிழக முதல்வரின் ஆட்சி கொடூரமானது எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளா.

No comments: