முன்னாள் இராணுவ உயர் அதிகாரி ஜானக பெரேராவை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கக்கூடாதென அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக ஜனாக பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.
இராணுவப் படையிலிருந்து ஓய்வு பெற்று எட்டாண்டுகளில் எந்த சந்தர்ப்பத்திலும் தாம் முகாம்களுக்குச் செல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தடவைகள் இராணுவ உணவு விடுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் இராணுவத்திற்கு பூரண ஆதரவை தொடர்ச்சியாக தாம் வழங்கியதாகவும், தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய வெற்றிகளை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை எனவும், படைத்தரப்பினரின் தியாகங்கள் இறுதியில் அவர்களது குடும்ப உறுப்பினர்களையே மிக வலுவாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிரிகளின் பலம் மற்றும் பலவீனத்தை ஆய்வு செய்து இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் இழப்புக்களை குறைக்க அல்லது தவிர்க்க முடியும் என்பதே என்னுடைய பிரதான கருத்தாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இந்த யுத்தம் காரணமாக நாள் தோறும் பல்வேறு உயிரிழப்புகள் இடம்பெற்றுவருகின்றன இது தொடர்பாக எனது கருத்தை தெரிவிக்கும் அடிப்படை உரிமை எனக்கு உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sunday, 4 May 2008
ஜானக பெரேராவின் பதிலடி…..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment