Sunday, 4 May 2008

வேட்பாளரை காப்பற்றிய இரண்டு காவல்துறையினருக்கு இடமாற்றம்!

கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.எம்.இஸ்மையிலை சிலர் தாக்க முயன்றுள்ளனர்.

தாக்குதல் நடத்த சென்றவர்களை கலைக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த இரண்டு காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி இந்த காவல்துறையினர் இருவரையும் இடமாற்றம் செய்துள்ளதாக சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துளளார்.

No comments: