Sunday, 4 May 2008

‘இருதின’ தடைசெய்யப்பட வேண்டும்: பாதுகாப்பு செயலாளர்:

இருதின போன்ற பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறுவதாக ஜனாதிபதி சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றிரவு தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் (இன்றைய ஞாயிறு இருதின) வெளியான இருதின இதழ் முகமாலை தோல்வி தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரை காட்டி கொடுத்த இராணுவ தளபதி என பிரதான செய்தியை வெளியிட்டது.

இதன் மூலம் இந்த பத்திரிகை மக்களை வேண்டுமென்றே தவறான வழியில் ஈட்டுச் செல்ல பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த பத்திரிகைகளை தான் தேசிய பத்திரிகைகள் என கூறுவதில்லை எனவும் அவ்வாறானவற்றை தாம் வாசிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறிவருவதுண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனது மூத்த சகோதர் வழி நடத்தும் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அரசாங்க அதிகாரி என்ற ரீதியிலேயே கலந்துகொண்டிருந்தார்.

No comments: