Sunday, 4 May 2008

கண்டி - தெல்தெனியவில் நேரக் குண்டு மீட்பு:

கண்டி - தெல்தெனிய காவல்துறை பிரிவில் குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு ஒன்றை காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர்.

தெல்தெனிய திகண பகுதியில் அம்பகொட்ட என்ற பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இரும்பு பெட்டியில் மறைத்து வைத்திருந்த நிலையில் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குண்டின் உடை 11 கிலோ கிராம் என தெல்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர். குண்டை கைப்பற்றிய வீட்டில் இருந்த பெண்ணொருவரும், அவரது மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடித்திருக்குமானால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

No comments: