Sunday, 4 May 2008

இலங்கையில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் இடம்பெயாவு.

இலங்கையில் இடம்பெறும் யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒரு லட்த்து 78 ஆயிரத்து 953 பேர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 6 ஆயிரத்து 748 குடும்பங்களும் வன்னியில் 13 ஆயிரத்து 445 குடும்பங்களும் வவுனியாவில் 6 ஆயிரத்து 848 குடும்பங்களும், கிளிநொச்சியில் 9ஆயிரத்து 273 குடும்பங்களும், திருகோணமலையில் ஆயிரத்து 772 குடும்பங்களும், மட்டக்களப்பில் 5 ஆயிரத்து 649 குடும்பங்களும், அம்பாறையில் 5ஆயிரத்து 188 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது.

No comments: