எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி கிழ்க்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலை கிழ்க்கின் விடியல் என்றும் கிழ்க்கின் உதயம் என்றும் மயக்கும் சொற்களை மகிந்த அரசு கையான்டூ தமிழ் மக்களையும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் திசை திருப்ப முயல்கிறது. |
1987 ஜுல்ய் 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றபட்டது. இவ் ஒப்பந்ததில் குற்றம் குறைகள் முறண்பாடுகல் நிறைய உண்டு.எனினும் இவ்வொப்பந்ததில் தெம்பு தருகின்ற ஒரு பகுதி அதன் முன்னுரை ஆகும்.இவ் முன்னுரையில் வடக்கும் கிழக்கும் ஈழம் வாழ் தமிழ் மக்களின் தாயகம் என்பதை ஓத்துக்கொன்டு உள்ளது. பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் கிழ்க்கில் இணைந்து பிணைந்து வாழ்கிறார்கள். ஒரு இனம் எதையும் இழக்கலாம் மீண்டும் வாழ்வு பெறலாம்.ஆனால் தன் மண்ணை இழ்ந்துவிட்டால் அந்த இனத்தின் வாழ்வு முற்றுப்பெறும். மொழியை இழந்த நிலையில் கூட இனங்கள் வாழ்ந்ததற்கு வரலாறு உண்டு. எமது போரட்டத்திற்கு சட்டவலு உண்டு. வரலாறும் எமக்கு வாய்பபாக்க உண்டு. எனவே தான் எதிர் வரும் தேர்தலை முற்றாகப் புறகணிப்போம். சில இடங்களில் புறகணிப்பதில் சிக்கல் இருப்பின் தீமைகள் குறைந்த தீதாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து அரசன் ஆதரோவோடு இயங்கின்ற பிள்ளையான் குழு, தலை துக்காதிருக்க, கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க சதிசெய்யும் சிங்கள அரசை மண்கவ்வச் செய்வோம்.என்றும் விழிப்போடு இருப்பது தான் நாம் விடுதலைக்கு கொடுகின்ற விலை. சலுகைகள் பெற்று எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.விடுதலைக்கு போரடிய எந்த இனமும் வீழ்ந்தாக வரலாறு இல்லை. நாம் இருக்கும் நாடு நமது என்பதை உணர்வோம். நம்புங்கள் நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் மலரும். மா.க. ஈழவேந்தன் |
Sunday, 4 May 2008
சிங்கள அரசு விரிக்கும் மாய வலையில் நாம் சிக்குவோமாயின் நாம் சின்னாபின்னமாகி சீரழிந்து போவது உறுதி. - ஈழவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment