இலங்கையில் திருகோணமலையை சேர்ந்த 28 வயதான அபா தனுஸ்க்க 19 வயதான அமர சஞ்சீவ 20 வயதான நுவான் 20 வயதான சனத் தர்ஸன் மற்றும் 26 வயதான ரூவான் பிரியந்த ஆகியோரே மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மாதம் 24-ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஒரு சிறிய விசைப்படகில்; கடலில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது.
வங்கக்கடலில் வீசிய நர்கீஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றில், அவர்களது படகில் இருந்த இயந்திரம் திடீரென கழன்று கடலுக்குள் விழுந்துள்ளது இதனால் படகு செயலிழந்து நடுக்கடலில் தத்தளிதத நிலையில் செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் வயர்லஸ் கருவி (ஹை பிரீக்வன்சி செட்); உதவியுடன் இலங்கையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு தங்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை காவல்துறையினருக்கும், இலங்கை அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து இந்திய கடலோரக் காவல்படைக்கு இலங்கை அரசு தங்கள் மீனவர்களின் உயிரை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
4 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில் படகில் நீர் புக ஆரம்பித்தவுடன் உயிர் பிழைக்க வேண்டி மூழ்கிக் கொண்டிருந்த படகிலேயே ஒருவர் மாறி ஒருவர் தங்களுக்குள் மொட்டை அடித்து பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால், டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படையின் மீட்பு மற்றும் செயல்பாடுகள் பிரிவு, இலங்கை மீனவர்களை மீட்குமாறு கிழக்குக் கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து 300 கி.மீ. கிழக்கே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கடலோரக் காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
இந்திய கடலோர காவல்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சென்னை காவல்துறையினரிடத் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில், அவர்கள் மீனவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், ஒருசில நாள்களில் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sunday, 4 May 2008
நடுக்கடலில் 6 நாட்களாக சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment