Sunday, 4 May 2008

வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா? பறந்து செல்லும் உருவம் ஏற்படுத்திய பரபரப்பு (வீடியோ இணைப்பு )

பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞான உலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும். பறக்கும் தட்டு வந்து இறங்கியது என்பார்கள். வேற்று கிரகவாசிகள் பூமியில் வந்து விட்டுப் போனார்கள் என்றும் தகவலும் காட்டுத் தீயாக பரவுவது உண்டு.

சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் மனித உருவம் இருப்பது போன்ற படம் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதேபோல இப்போது பறக்கும் பெண் போன்ற ஒரு மர்ம உருவம் மெக்சிகோ நாட்டின் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2006-ம் ஆண்டு மே மாதம் இதே போன்ற ஒரு செய்தி மெக்சிகோவில் பரவியது. வானில் அடையாளம் தெரியாத மர்மப் பொருட்களை படம் பிடிக்கும் விண்ணியல் ஆய்வாளர்கள் பலர் அப்போது மலைப்பகுதியில் தாவித் தாவி பறக்கும் பெண் உருவத்தைக் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குபின் அந்த பறக்கும் பெண் உருவம் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் பிரபல விண்ணியல் ஆய்வாளர் அன்னா லூசியா சிட் என்பவர் தலைமையிலான குழுவினர் இதை உறுதி செய்துள்ளனர். மேலும் இதற்கான வீடியோ பட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அன்னா லூசியா கூறியதாவது:-

மலைப்பகுதியில் பறக்கும் உருவம் நடமாடுவது உண்மைதான். எங்களின் தொடர்ச்சியான ஆய்வு இதை உறுதி படுத்துகிறது.

பறக்கும் அந்த உருவத்தை படம் பிடித்திருக்கிறோம். ஆனால் அதன் தோற்றம் தெளிவாகப் பதிவாகவில்லை. புகை போன்ற உருவம் மட்டுமே அதில் தெரிகிறது. அந்த உருவம் பெண் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. அந்த உருவத்தை 40 பேருக்கும் அதிகமானவர்கள் கூட பார்க்கவில்லை.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அன்னா லூசியா தவிர ஜெரார்டோ கர்ஷா, லியானார்டோ சமானியகோ குடலூப் என்னும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அந்தப் பறக்கும் பெண் உருவத்தை அப்போது நேரில் பார்த்துள்ளனர். இவர்கள் இருவருமே வெவ்வேறு நகரங்களில் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இப்போது வெளியிட்டுள்ள பேட்டிகளால்தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம உருவம் பற்றி கர்ஷா வர்ணிக்கும்போது, ``சூனியக்காரி மாதிரியான தோற்றத்தில் அது இருந்தது. அந்த உருவம் தொப்பி அணிந்து துடைப்பக் குச்சியில் பறந்து சென்ற மாதிரி இருந்தது. நான் ரோந்து போகும் பகுதியில் ஒரு கல்லறைப் பக்கமாக 2 நேரம் அந்த மர்ம உருவத்தை பார்த்து இருக்கிறேன். பறக்கும் அந்தப் பெண் உருவம் தன் உருவத்தை மறைத்தது போன்ற தோற்றத்திலும் இருந்தது'' என்கிறார், திகிலுடன்.

இவராவது பரவாயில்லை. குடலூப் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டார். அவர் கூறும்போது, "எனது ரோந்து வாகனத்தில் சென்றபோது மரத்திலிருந்து அந்த உருவம் வண்டியின் முன்பக்கமாக விழுந்தது. வாகனத்தின் முன் பக்க கண்ணாடி மீது கையையும் வைத்தது. அதன் பிறகு எனக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. கண்விழித்துப் பார்த்தபோது எனது ஆடைகள் களைக்கப்பட்டு இருந்தது. பிறகு என்னை மீட்க மருத்துவ குழுவை உதவிக்கு அழைத்தேன். அந்த உருவம் பார்ப்பதற்கு ரொம்ப வினோதமாக இருந்தது. அதற்கு மிகப் பெரிய கண்களும் இருந்தன. உடல் நிறம் படு கறுப்பாக இருந்தது. அப்பப்பா...'' என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

போலீஸ் அதிகாரிகளும், விண்ணியல் ஆய்வாளர்களும் ஒரே நேரத்தில் இப்படிச் சொல்வதால் 2006-ல் பார்த்த அந்த பறக்கும் மர்ம பெண் வேறு கிரகத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ? என்றும், இறந்து போன பெண்ணின் ஆவியாக கூட அது இருக்கலாம் என்றும் உலகம் முழுவதும் பரபரப்பு பரவியுள்ளது.

No comments: