Monday, 19 May 2008

மன்னாரில் படையினரின் அகோர எறிகணை வீச்சால் பெருமளவான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியவண்ணம் உள்ளனர்

மன்னாரில் கடந்த ஒரு சில தினங்களாக தொடரும் உக்கிர மோதல்களால் உள்ளக இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ளன.

பாலம் பிட்டிப் பகுதியிலும் அதனை அண்மித்த பின்புற தளங்களில் இருந்தும் படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் பெருமளவில் தமது சொந்த வசிப்பிடங்களைவ விட்டு வெளியேறியவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனங்காமம், நட்டங்கண்டல், பாண்டியன் குளம் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வவுணிக்குளம் வடகாடு பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியேறும் மக்களுக்கான தற்காலிக உறைவிடங்களையும் உணவுப் பொருட்களையும் வழங்குவதில் வன்னி பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: