தமது சமூகத்துக்காக அமைச்சுப் பதவிகளையும், எம்.பி. பதவிகளையும் இராஜிநாமாச் செய்யும் துணிச்சல் முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டுமே உண்டென கிண்ணியா நகரசபையின் உதவித் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம். முஜீப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் தமது அமைச்சுப் பதவிகளை இராஜிநாமாச் செய்யப் போவதாக முஸ்லிம் அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டனர். எனினும், முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவுக்கு அன்றி பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் தாம் சொன்னபடி இதுவரை எமது பதவியை இராஜிநாமாச் செய்யவில்லை. எனவே, முஸ்லிம் அமைச்சர்கள் சமூக நலனுக்காக அல்லாமல் சொந்த நலன்களுக்காகவே அரசில் இருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கும், பிரதிநிதிகளுக்கும் பதவிகளை விட தமது சமூகமே முக்கியமானது. அதனால், தான் கிழக்கு முஸ்லிம்களின் காணி பாதுகாப்பு விடயத்தில் ஆபத்து விளைவிக்கப்படுவதை ஆட்சேபித்து தலைவர் ரவூப் ஹக்கீமும் ஏனையோரும் தமது அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீசினர். அதேபோல கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சரை உறுதிப்படுத்துவதற்காகவே தலைவரும் ஹஸன் அலி, பஷீர் சேகுதாவுத் ஆகியோரும் தமது எம்.பி. பதவிகளை இராஜிநாமாச் செய்தனர். எனவே, அமைச்சர்கள் இராஜிநாமாச் செய்வதாக சொல்வார்களே தவிர செய்ய மாட்டார்கள்.
Tuesday, 20 May 2008
`அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்யும் துணிச்சல் முஸ்லிம் காங்கிரஸுக்கே உண்டு'
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment