Tuesday, 20 May 2008

அக்கரைப்பற்றில் கடத்தப்பட்ட இருவர் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை

அக்கரைப்பற்று பகுதியில் அண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போன இருவர் தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று கல்முனை வீதியில் கடந்த 6 ஆம் திகதி, வெள்ளை வானில் வந்தோரால் நாவற்காட்டைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான வேல்முருகு ரகுகுமார் (27 வயது) என்பவரே கடத்தப்பட்டு காணாமல் போனதாக அவரது மனைவி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேநேரம் நாவற்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் (25 வயது) என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: