Tuesday, 20 May 2008

ரணிலின் ஜேர்மன் பயணத்தை ஏற்பாடுசெய்தவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான செல்வரத்னமாம்-- சிங்கள நாளேடு

அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரச்சாரம் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க திடீரென ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பின் சிங்கள நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான நொயெல் செல்வரத்னம் என்ற வர்த்தகர் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இலங்கை பற்றிய பல்வேறு தகவல்களை ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு அதிகாரிகளிடம் குறிப்பிட உள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர், ஜெர்மனியின் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், இலங்கைக்கு உதவிகள் வழங்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: