அம்பாறை மாவட்டம் ரூபஸ்குளத்தில் உள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் இன்று காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தேடுதலில் மேலதிகமாக காவல்துறையினரும் ஊர்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர் அம்பாறை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment