யாழ் குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தெரிவுசெய்யப்பட்ட 454 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சுக்குப் பணித்துள்ளது.
மீளக்குடியமர்த்துவதற்கான காணிகளை அடையாளம் காணும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்னமும் வழங்கப்படாததால் மீளக்குடியமர்த்தும் பணிகளில் இழுபறிநிலை காணப்படுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் காணப்படும் சூழ்நிலைகள் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை வழங்கமுடியாதிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியபோதும், பாதுகாப்பைக் காரணம்காட்டி மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதியை வழங்குவது இழுத்தடிக்கப்படக்கூடாது என உயர்நீதிமன்றம் அறிவித்ததுடன், மேல்நீதிமன்ற நீதிபதியால் நியமிக்கப்படும் பிரதிநிதி, அரசாங்க அதிபரால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய தெரிவுக்குழுவின் ஊடாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளவர்களுக்கு அனுமதிகளை வழங்குமாறும் அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனிதஉரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment