தனியார் பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 06 ரூபாவாக இருந்த அடிப்படைக் கட்டணம் 07 ரூபாவாக வும் 08 ரூபாவாக இருந்த கட்ட ணம் 10 ரூபாவாகவும் 11 ரூபா கட்டணம் 14 ரூபாவாகவும் 16 ரூபா கட்டணம் 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
ஏனைய கட்டணங்கள் 27.2 வீதத்தால் அதிகரிக்கப்படும் போக்குவரத்து அமைச்சருடன் இன்று இந்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை போக்குவரத்துசபை(இ.போ.ச.) பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Sunday, 25 May 2008
இலங்கையில் தனியார் பஸ் கட்டணங்கள் நள்ளிரவு முதல் உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment