நோயை குணப்படுத்துவதற்காக மதப் போதகர் ஒருவரிடம் சிகிச்சை பெறச் சென்ற இளைஞர் ஒருவர் அதிக இளநீர் அருந்தக்கொடுத்ததன் காரணமாக பரிதாபகரமாக உயி?ழந்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் நீர்கொழும்பு, கிம்புலாப்பிட்டிய இத்தகொடல்ல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பி. சமீர ரந்தீர (21வயது) என்ற இளைஞரே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இவர் கிம்புலாபிட்டிய கட்டியல வீதியை சேர்ந்தவராவார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது: கிம்புலாபிட்டிய இத்தகொடல்ல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் பிரதான போதகர் நோய்களை குணப்படுத்துவதற்காக ஆசிர்வாதம் செய்து, இறை தியானத்தின் மூலமாக சிகிச்சையளிப்பதில் கடந்த ஐந்து மாத காலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் சக்தியும் இப்போதகரிடம் இருப்பதாக பிரசித்தமானதால், பல நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று இவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சம்பவத்தில் இறந்த இளைஞரும், அவரது சின்னம்மாவும் போதகரிடம் இளைஞனின் நோயை சுகப்படுத்துவதற்காக சென்றுள்ளனர்.
அதன்போது, போதகர் 13 இளநீர்களை இளைஞருக்கு பருகக் கொடுத்துள்ளார்.
இளைஞர் பருக முடியாது எனக் கூறியும், வற்புறுத்தலின் பின்னர் நீண்டநேரம் எடுத்து ஒருவாறு பருகியுள்ளார். இதற்கிடையில் போதகர் 21 இளநீர் பருகினால்தான் உடலில் உள்ள நோய் வெளியேற்றப்படும் எனக் கூறியுள்ளார். 13 வது இளநீரை பருகிய வேளையிலேயே இளைஞர் கடும் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
தற்போது இளைஞனின் பிரேதம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸார் குறிப்பிட்ட மதபோதகரிடம் சம்பவம் பற்றி வாக்கு?லம் ஒன்றை பெற்று பின்னர் செல்ல அனுமதித்துள்ளனர்.
இளைஞனின் தந்தை பி.சாலஸ் எரிக் பெர்னாண்டோ பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மகன் அதிகளவு இளநீர் பருகக் கொடுத்ததன் காரணமாகவே இறக்க நேரிட்டதாகவும், தனது மகன் நீரழிவு நோயாளி எனவும் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sunday, 25 May 2008
நோயைக் குணப்படுத்த மதபோதகriடம் சென்ற இளைஞர் 13 இளநீர் அருந்தக் கொடுத்தமையினால் உயிriழப்பு நீர்கொழும்பு கிம்புலாபிட்டியவில் சம்பவம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment