Tuesday, 6 May 2008

காரைதீவில் வாக்களர் அட்டைகள் பறிமுதல்:

காரைதீவில் வாக்களர் அட்டை பறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தரப்பு அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மட்டக்களப்பு காரைதீவு கிராமத்தில் உள்ள மக்களிடம் வாக்காளர் அட்டைகளை பறித்து வருவதாக தேர்தல் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். காரைதீவு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று, வாக்களர் அட்டைகள் பறித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை அம்பாறையில் ஒரே இலக்க தகடுகள் பொறித்த இரண்டு வாகனங்கள் சுற்றித்தி திரிவதாக ஜே.வீ.பீயும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பும் தேர்தல் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளன.

இது தொடர்பாக அம்பாறை காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

No comments: